பலாத்கார முயற்சி தோல்வி... பள்ளி மாணவியை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்
கான்பூர்: உத்திரப்பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்ததால், அவளை மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளது மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று. இதில் பலத்த காயமடைந்த அச்சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பாபுபூர்வா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னர் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், அச்சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாகவும், வீட்டில் தனக்குப் பிடிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதாகவும் அச்சிறுமி போலீசில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, நேற்று அச்சிறுமியின் அண்ணன் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வீட்டில் தனியாக இருந்த தனது தங்கையை மூன்று பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அது நடக்காததால் அவர்கள் அச்சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு காயமடைந்த சிறுமியின் அண்ணன் போலீசில் அளித்துள்ள புகாரால் இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் அண்ணன் தனது புகாரில் ஆரிப், தேகன் மற்றும் அசாம் என்ற மூன்று பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.
மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படும் மாணவிக்கு இரண்டு கால்களில் எலும்பு முறிவு மற்றும் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications