”நிர்ப்பயா” வழக்கின் சிறார் குற்றவாளி புகைப்படத்தை வெளியிட பெற்றோர் கோரிக்கை
டெல்லி: டெல்லியில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சிறுவனான குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் செய்தியாளர்களிடம், "சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள அந்த மைனர் நபர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள மற்றவர்களிடம் இருந்து ஜிஹாத் தொடர்பான போதனைகளைப் பெற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இத்தைகைய போக்கு மிகவும் ஆபத்தானது.

இச்சூழலில் அந்த மைனர் நபரை விடுவிப்பது சமூகத்துக்கு ஆபத்தாக அமையும். கூட்டுப் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்ட அந்த நபர், தனது குற்றச் செயல்களுக்கு வருந்தியதாகவும், திருந்தியதாகவும் தெரியவில்லை. எங்கள் மகளுக்கு நிகழ்ந்த கொடுமை வேறெந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது.
அந்த நபர் தனது தண்டனைக் காலம் முடிந்து அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இந்நிலையில், அந்த நபரை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தால் அவரது புகைப்படத்தை வெளியிட்டு சமூகத்துக்கும், உலகத்திற்கும் அந்த நபரை அடையாளம் காட்ட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications