For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபல நடிகை மரணம்.. 2 முறை மீண்டும், ஒரே செகண்டில் உயிர் போயிடுச்சே.. கடைசிவரை துவளாத "வில் பவர்"

பிரபல நடிகையின் மரணம் குறித்து ரசிகர்கள் சோகத்துடன் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 2 முறை புற்றுநோயில் இருந்து போராடி, கடினமாக போராடி மீண்டு வந்த நடிகையின் மனஉறுதியை ரசிகர்கள் வியந்து பதிவிட்டு வருகின்றனர்.. அதேசமயம், ஒரே நிமிடத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்த துயரத்தையும் சோகத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்..

பிரபல நடிகை ஐந்த்ரிலா ஷர்மா.. இவர் மேற்குவங்க நடிகை ஆவார்.. 24 வயதுதான் ஆகிறது.. பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர்.. ஆரம்பத்தில் சீரியலில்தான் அறிமுகமாகி உள்ளார்..

ஜூமுர் என்ற டிவி சீரியல் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர்.. அதற்கு பிறகு சினிமா வாய்ப்பு வந்துள்ளது.. "அமி திதி நம்பர்1", "லவ் கஃபே" போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்..

கேன்சர்

கேன்சர்

இதைதவிர, பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்துள்ளார்.. இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்... ஒருகட்டத்தில் பிஸியான நடிகையாகிவிட்டார். இந்நிலையில், ஐந்த்ரிலா ஷர்மாவை புற்றுநோய் தாக்கியது.. இதனால் அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போனார்கள்.. எனினும், உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அவரது உயிரை காப்பாற்ற முயன்றனர்.. இந்த சமயத்தில் அவருக்கு நவம்பர் 1-ம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது.. இதனால், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

ஆபரேஷன்

ஆபரேஷன்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென மண்டையோட்டில் ரத்தக்கசிவு வந்துவிட்டது.. இதனால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு அடுத்தபடியாக மாரடைப்பு வந்துவிட்டது.. அதுவும் பலமுறை மாரடைப்பு வந்துள்ளது.. இதனால் அவரின் உடல் நிலை மோசமாகிவிட்டது.. உடனடியாக சிஆர்பி கொடுக்கப்பட்டும், அது பலனளிக்காமல் ஐந்த்ரிலா ஷர்மா பரிதாபமாக உயிரிழந்தார்..

நுரையீரல்

நுரையீரல்

மூளை புற்றுநோய் இவரை தாக்கியுள்ளது.. அதற்கு Primitive Neuro-Ectodermal Tumor (PNET) என்று பெயர் சொல்கிறார்கள்.. இந்த வகை புற்றுநோய் மிக அரிதானது.. பெரும்பாலும், குழந்தைகள் மற்றும் 25 வயதுக்குக்கு குறைவானவர்களையே இந்த புற்றுநோய் அதிகமாக பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.. இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 53 சதவீதம் பேர் 5 வருடம் வரை மட்டுமே உயிர் வாழ்வதாக சொல்கிறார்கள்.. இதற்கு அடுத்தபடியாகத்தான், ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அதற்கான சிகிச்சையும் ஆரம்பகட்டத்திலேயே தரப்பட்டது..

 கார்டியாக் அரெஸ்ட்

கார்டியாக் அரெஸ்ட்

இதில் புற்றுநோய்க்கு மட்டும் சில வருடங்களாகவே சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.. ஆனால், முழுமையாக அதில் இருந்து மீள முடியாமலும் தவித்து வந்த நிலையில்தான், மூளை பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இந்த பக்கவாதத்தினால், அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.. ஐசியூவில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கார்டியாக் அரெஸ்ட் வந்துவிட்டது. அப்போதுகூட சிபிஆர் வைத்து அவரது உயிரை மீட்க டாக்டர் பெரும்பாடு பட்டனர்.. ஆனாலும் இறந்துவிட்டார்.

 ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

இத்தனை நோய்களும், சிகிச்சைகளும் அடுத்தடுத்து வந்தாலும், அதிலிருந்தும் மிகுந்த மனவலிமையுடன் போராடியே மீண்டு வந்தார்.. ஏற்கனவே 2 முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பதால், இந்த முறையும் எப்படியும் கோமா நிலையில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என்று குடும்பத்தினரும், ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து இருந்தனர்... 24 வயதில் இளம்நடிகை மரணமடைந்து, வங்க தேச ரசிகர்களை துவண்டுபோக வைத்துள்ளது.. இத்தனை வருடம் போராடி மீண்டு வந்தும், ஒரே நிமிடத்தில் ஏற்பட்ட மாரடைப்பு நடிகையை மரணமடைய செய்துவிட்டதே என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Famous actress aindrila sharmas Self confidence and and Will power
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X