"மொட்டை மாடியில்".. ஆட்டம் போட்ட "ரீல்"பெண்.. இன்ஸ்டா பிரபலம் செய்த பகீர்..2வது நாளாக திணறும் போலீஸ்
இன்ஸ்டா பிரபலம் லீனா நாக்வன்ஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
ராய்ப்பூர்: குறைந்த நாட்களிலேயே, அதிக ஃபாலோயர்ஸ்களை ஈர்த்த இளம் பிரபலத்தின் இழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. 2வது நாளாக இவரது மரணம் குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு க்ளூவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள் போலீசார்.. என்ன நடந்தது?
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் கெலோ விகார் என்ற காலனி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி.. 22 வயதாகிறது.. இவர் ஒரு கல்லூரி மாணவி ஆவார்.. பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்..
இவர் ஒரு இன்ஸ்டா பிரபலமும் ஆவார். சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.. தனியாகவே ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்..

மாடியில் தூக்கு
இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.. அடிக்கடி செய்திகளிலும் இவரது பெயர் வந்து போகும்.. அந்த அளவுக்கு ஃபேமஸ் ஆனவர்.. இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. தன் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தன்னுடைய ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்... இதனை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்... போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அரைகுறை
பிறகு வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இதுகுறித்தும் விசாரணையை தொடங்கினர். நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி தினேஷ் சொல்லும்போது, "மதியம் சுமார் ஒரு மணிக்கு, கெலோ விஹார் காலனியில் வசிக்கும் 22 வயதான லீனா என்பவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. சம்பவ இடத்திலிருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.. அதனால், அவரது செல்போனை மட்டும் கைப்பற்றியுள்ளோம்... தனிப்பட்ட காரணங்களால் லீனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை" என்றார்.

ஃபாலோயர்ஸ்
லீனாவின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.. இன்ஸ்டாகிராமில் இவர் எப்போதுமே ஜாலியான ரீல்களை வெளியிடுவாராம். அதனால்தான், அவர் புகழ்பெறவும் துவங்கி உள்ளார். கிறிஸ்துமஸ் அன்றுகூட, ரீல்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.. ஆரம்பத்தில் ஜாலியாக ரீல்களை போட்டு வந்தவர், தனக்கு ரசிகர்கள் பெருகுவதை பார்த்ததும், அரைகுறை டிரஸ்ஸூடன் போஸ் கொடுத்து ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாராம்.. இந்த ரீல்களுக்கும் ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் இருந்து வந்துள்ளனர்..

மிட்நைட்டில்
மதியம் 1 மணிக்கு லீனா தற்கொலை செய்ய வேண்டிய காரணம் என்னவென்று தெரியவில்லை என்கிறார்கள்.. போலீசார் அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்களும் தங்கள் மகளுடன் எந்த தகராறும் இல்லை என்று சொல்கிறார்களாம். அப்படியானால், வெளிநபர்கள் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் லீனா தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது, விசாரித்து வருகிறோம் என்கிறார்ள் போலீசார்.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தற்கொலை செய்துகொண்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், இப்போது இந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது, மேலும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications