ரயில்வே ஸ்டேஷன் வாசலில்.. ஆட்டோவில் ரகசியமாக வந்திறங்கிய பெண் யார் பாருங்க.. ஸ்டன் ஆகி நின்ற மக்கள்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த பெண் பிரமுகர் யார்? ஆட்டோவில் நள்ளிரவில் இங்கு வந்து இறங்கியது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஆனால், விஷயத்தை கேள்விப்பட்டதுமே, ஒட்டுமொத்த மாநிலமும் திரண்டு வந்து பாராட்டி கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது நம்முடைய நாட்டில் கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் அடியோடு குறைந்து கொண்டே வருவதும், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன.

uttar pradesh auto

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவருவதால், பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை இன்று வந்துவிட்டது. அதிலும் சில கல்வி நிறுவனங்களிலேயே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கத்தை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

பாலியல் புகார்: இதுபோன்ற கொடுமைகளுக்கு தென்மாநிலங்களும் விதிவிலக்கல்ல என்றாலும், வடமாநிலங்களில் அதிக அளவு நடந்து வருகிறது.. இதில் உத்திரபிரதேச மாநிலம்தான் டாப்பில் இருந்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும், பெண் குழந்தைகள் மீதான பலாத்கார தாக்குதல்கள் பெருகிகொண்டே இருக்கின்றன.

அதனால்தான், இதற்கெல்லாம் இதற்கு தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இப்போதுகூட, ஒரு புதிய முயற்சியை, பெண் போலீஸ் அதிகாரி மேற்கொண்டுள்ளார்.. ஆக்ராவை சேர்ந்த பெண் காவல் உதவி ஆணையர் (ACP) பெயர் சுகன்யா ஷர்மாவுக்கு 33 வயதாகிறது..

மஃப்ட்டியில் சோதனை: நகரில் பெண்களின் பாதுகாப்பு நிலையைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக, இரவு நேரத்தில் மஃப்ட்டியில் சோதனை செய்ய முயன்றார்.. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஆட்டோவில் தனியாக பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்தார் சுகன்யா.. இதற்காக அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று, தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லி, கட்டணம் எவ்வளவு? என்று கேட்டுவிட்டு ஆட்டோவில் ஏறிக் கொண்டார்.

பிறகு, இந்த ஊரில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? என்று ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு தந்து நிலவரத்தை அறிந்து கொண்டார்.. பிறகு ஒரு சுற்றுலா பயணியைப்போல, ஆக்ரா கான்ட் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் போய் ஆட்டோவில் இறங்கினார்.. ரயில் நிலையத்துக்கு வெளியிலிருந்து நின்று கொண்டிருந்தார் சுகன்யா.

uttar pradesh auto

அவசர கால அழைப்பு: அப்போது திடீரென 112 என்ற அவசரக்கால அழைப்பு எண்ணுக்கு, சுகன்யா போன் செய்தார்.. "எனக்கு உடனே உதவி வேண்டும்.. இரவு வெகுநேரமாகிவிட்டது. ரோடு முழுக்க வெறிச்சோடி காணப்படுகிறது.. இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்ல பயமாக இருக்கிறது" என்று போலீசாரிடம் சொன்னார்.

அப்போது சுகன்யாவிடம் பேசிய ஹெல்ப்லைன் ஆப்ரேட்டர், அவரைப் பாதுகாப்பான இடத்தில் இருக்க சொல்லிவிட்டு, அவர் தற்போது நின்றுகொண்டிருக்கும் இடத்தை பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டார்.

தைரியமா இருங்க: அடுத்த சில நிமிடங்களிலேயே ரோந்து படையிலிருக்கும் பெண் அதிகாரிகள் சுகன்யாவைத் தொடர்புகொண்டார்கள்.. 'பயப்பட வேண்டாம்.. நாங்கள் வந்து கொண்டேயிருக்கிறோம்.. சிறிது நேரத்தில் உங்களை பாதுகாப்பாக அழைத்து செல்கிறோம் ஏன்றார்.

அதற்கு பிறகுதான், அவர்களிடம் தன்னுடைய அடையாளத்தை தெரிவித்த சுகன்யா, அவசரகால சேவை அமைப்பை சோதனை செய்யவே இத்தகைய செயல் மேற்கொண்டதாக கூறினார்.. அத்துடன், இந்த சோதனையில் தாங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் என்றும் கூறி அவர்களை மனமார பாராட்டினார்.

சபாஷ்: அதேபோல, சுகன்யாவின் இந்த துணிச்சலான செயலை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள்.. இதுபோல் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள போலீசார் இதுபோல செய்தாலே போதும். ஒரு சாதாரண மனிதராகி பயணித்தால்தான், இரவில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் துல்லியமாக அறிய முடியும். பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையை சுகன்யா ஏற்படுத்தி வருவதாக, பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+