2 லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாமல் தூக்கில் தொங்கிய விவசாயி- மகாராஷ்டிராவில் பரிதாபம்!
Subscribe to Oneindia Tamil
நாசிக்: மகாராஷ்டிராவில் 2 லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அம்பேகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலு அவகாத். இவர் தனது வயலில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். விவசாய தேவைகளுக்காக தனது உறவினரிடம் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.

ஆனால் அங்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியவில்லை.
கடனை திருப்பி அடைக்க முடியாததால் அவமானம் அடைந்த பாலு அவகாத் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அங்கு பெரும் சோகம் நிலவி வருகின்றது.












Click it and Unblock the Notifications