தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்களாம்... ஹரியானா அமைச்சரின் 'திமிர்' பேச்சு!
சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என்று ஹரியானா அமைச்சர் தன்கார் திமிர்த்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் ஆளும் பாரதிய ஜனதா அரசில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் ஓபி தன்கார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்கொலை என்பது குற்றம். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் தங்கள் பொறுப்பை மறந்து ஓடுகின்றனர். அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களை கோழைகள், கிரிமினல்கள் என்று தான் கூறவேண்டும். இதனால் அவர்களுக்கு ஏன் அரசு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தன்கார் கூறினார்.
லோக்சபாவில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் விவகாரத்தை கையிலெடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். இந்த நிலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹரியானா மாநில அமைச்சர் தன்கார் இப்படி விவசாயிகளுக்கு எதிராக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது பாரதிய ஜனதாவில் விவசாயிகள் பிரிவு தலைவராக இருந்த தன்கார், விவசாயிகள் தற்கொலைக்காக அப்போதைய மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனவும் சாடியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications