வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை, மகன் கைது!
ஹைதராபாத்: வீட்டு பணிப்பெண்ணை, மாறி, மாறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையும், மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் பஷீர்பாத் மண்டல் என்ற பகுதியை சேர்ந்தவர் காசப்பா மகன், அசோக் குமார். இவரது வீட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுமி வீட்டு வேலை பார்த்து வந்தார்.

இந்த சிறுமியுடன், அசோக்குமார் நெருக்கத்தை வரவழைத்துக் கொண்டு, திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வார்த்தை காண்பித்துள்ளார். இதை நம்பிய சிறுமி, அசோக்குமாரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
இதை பயன்படுத்தி, சிறுமியை, அவ்வப்போது அசோக்குமார் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனிடையே, அசோக்குமார் திடீரென வேறு ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்து போயுள்ளார். இதன்பிறகு, வீட்டு வேலைக்கு வந்த அந்த சிறுமியை, காசப்பா பலாத்காரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
மகனுக்கு, பிறகு தந்தையும், வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்துவந்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக காசப்பா மிரட்டியுள்ளார்.
இதனிடையே அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து விவரம் அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காசப்பா மற்றும் அசோக் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications