மோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உறுதி செய்த அமைச்சகங்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.

முக்கிய திட்டங்களை பிரதமர் அலுவலகம் தேர்வு செய்து அது குறித்த விளக்கமான திட்டங்களை விரைந்து தயாரித்து அளிக்குமாறு அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரதமர் இந்த திட்ட விளக்கங்களை எப்பொழுது பார்ப்பார் என்பது தெரியாததால் அமைச்சகங்கள் 24 மணிநேரத்திற்குள் திட்ட விளக்கங்களை தயார் செய்து அவற்றை அமைச்சக செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளன.
பிரதமர் அலுவலகம் தெரிவித்த விவகாரங்களுக்கு பதில் அளிப்பதில் மூத்த அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை பிசியாக இருந்தனர்.
அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை, சுத்தமான குடிநீர் வழங்க மோடி அரசு முனைப்பாக உள்ளதால் ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் குறித்த விளக்க உரையை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தயார் செய்து வருகிறது.
நகரங்களை மேம்படுத்த, புதிய நகரங்களை உருவாக்க தேவையான திட்ட விளக்கங்களை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications