பெங்களூர்: ரவுடி ஆட்டோ டிரைவரை அடித்து உதைத்த வீரப்பெண்
பெங்களூர்: பெங்களூரில் நள்ளிரவில் ஆட்டோவில் இருந்து இறங்கச் சொல்லி தகராறு செய்த டிரைவரை அடித்து உதைத்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார் ஒரு வீரப்பெண். இந்த சம்பவம் பெங்களூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் மடிவாளா அருகே உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ரினி பிஸ்வாஸ் (25). இவர் மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்ஜீனியராக வேலை செய்கிறார். வருகிறார்.

கடந்த 18-ம் தேதி உறவினரின் வீட்டுக்கு சென்ற ரினி, இரவு 11 மணி அளவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். இரவு 11.45 மணியளவில் மடிவாளா பிரதான சாலைக்கு அருகே ஆட்டோவை நிறுத்திய டிரைவர், "இனிமேல் ஆட்டோ வராது. சாலை சரியாக இல்லை. நீங்கள் வேறு ஆட்டோவில் செல்லுங்கள்" என ரினியிடம் தெரிவித்துள்ளார்.
"நள்ளிரவில் இருட்டாக உள்ளதால் தனியாக செல்ல முடியாது. ஆட்டோவில் ஏறும்போது பேசியவாறு, என்னுடைய வீட்டுக்கு அருகே வந்து விடுங்கள்" என ரினி கூறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ டிரைவர், ரினியின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து ஆட்டோவிலிருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரினி, ஆட்டோ டிரைவரை பதிலுக்கு அறைந்துள்ளார். மேலும் அவரது மூக்கிலும் உதைத்துள்ளார். இருப்பினும் ஆட்டோ ஓட்டுநர் அவரை வெளியேற்றிவிட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருவர் சமாதானம் செய்துள்ளனர்.
இதனிடையே, ஆட்டோவையும், டிரைவரையும் போட்டோ எடுத்த ரினி, அவசர போலீஸ் 100-க்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த தகவலை ரினி பிஸ்வாஸின் நண்பர் ஒருவர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியின் ட்வீட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
இதை யடுத்து, கமிஷனர் எம்.என்.ரெட்டி மடிவாளா போலீஸாருக்கு இந்த தகவலை தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரினி பிஸ்வாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஆட்டோ டிரைவர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் ரினி கொடுத்த ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு தேடினர். அதனைத் தொடர்ந்து முகமது அலி என்கிற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications