காவிரி: உச்சநீதிமன்ற உத்தரவால் பதட்டம்... பெங்களூர் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்!
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்துக்கு 15,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து ஒருவார காலமாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்துக்கு கூடுதலாக காவிரி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக வாகனங்கள் மீது கர்நாடகாவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் சில பள்ளிகள் திடீரென மூடப்பட்டன.
சில பள்ளிகளில் மாணவர்களை வந்து அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டன. இதனால் பெங்களூரு நகரில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தலைநகரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டதால் நகர் முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications