காஷ்மீரில் ராணுவத்தினர், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே தீவிரமான துப்பாக்கிச்சண்டைநடைபெற்று உள்ளது.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே தீவிரமான துப்பாக்கிச்சண்டை நடைபெற்று இருக்கிறது. இருவருக்கும் இடையில் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் ஷோபியன், புல்வாமா, பார்திபோரா, மற்றும் கனவ்போரா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.

இன்று அதிகாலை ஷோபியன் பகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு இந்த தேடுதல் நடத்தப்பட்டது.
ராணுவத்தின் தேடுதலின் போது அங்கு பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 3 மணி நேரம் நடந்தது.
இந்த தாக்குதலில் ராணுவத்தின் தரப்பில் எந்த மரணமும் நிகழவில்லை. அதேபோல் எந்த தீவிரவாதியும் கொல்லப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. உடலில் காயங்களுடன் தீவிரவாதிகள் தப்பித்து சென்று உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications