காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. அவந்திபோராவில் மீண்டும் பதற்றம்
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா, அவந்திபோரா பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.

இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர். இரண்டு நாட்கள் முன்பு நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவந்திபோரா ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு ராணுவ தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் குடியிருப்பு பகுதியில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications