40+20 சட்டப்பேரவை தொகுதிகள்.. தேர்தலுக்கு தயாராகும் சத்தீஸ்கர், மிசோரம்! வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ராய்ப்பூர்: நவம்பர் மாதம் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 60 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்த அளவில், தற்போது மாநிலத்தில் ஆட்சியாளராக காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக். 20ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடத்தப்படுகிறது. வேட்புமனுக்கள் வரும் 21ம் தேதி பரிசீலிக்கப்படுகின்றன. அதனை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 23 கடைசி நாளாகும்.
இது தவிர தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10. வேட்புமனுக்கள் நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் வரும் 21ம் தேதியும் ராஜஸ்தானில் வரும் 30ம் தேதியும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications