நான் பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்.. தேர்தல் ஆணைய தீர்ப்பைப் பார்த்து அதிமுக எம்பி உற்சாகம்!
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நகலைத் தான் பார்த்துவிட்டதாக அதிமுக எம்.பி விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

டெல்லி : இரட்டை இலை எடப்பாடி அணிக்கே என்கிற தேர்தல் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு நகலை தான் பார்த்துவிட்டதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரது இறுதி வாதங்களை அடுத்து இன்று தேர்தல் ஆணையம் இறுதி தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு ஒதுக்கிவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான நிலையில் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்போ இதை தொடர்ந்து மறுத்துவருகிறது. இன்னும் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தினகரன் அணி தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தான் தேர்தல் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பு நகலைப் பார்த்துவிட்டதாககவும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உற்சாகமாகத் தெரிவித்து உள்ளார். மேலும் சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications