தாஜ்மஹால் பளிங்கு கற்கள் மீதான பச்சை நிற படிமங்களை அகற்ற உ.பி. அரசு உத்தரவு
லக்னோ: தாஜ்மஹாலின் பளிங்கு கற்கள் மீது பச்சை நிறபடிமங்கள் ஏன் படிந்துள்ளது என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்ரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
தாஜ் மஹாலின் மீது படிந்து வரும் பச்சை நிறப் படிமங்களால் அதன் அழகு பொலிவிழந்து வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த பாதிப்புகளுக்கு சிரினோமிட்ஸ் என்ற பூச்சியினங்களின் கழிவுகள் காரணமாக இருக்கலாம். அந்தப் பூச்சியினங்கள், அருகில் உள்ள யமுனை நதியில் பல்கிப் பெருகி, அந்த நதியையும் மாசுபடுத்தியுள்ளன என கூறப்படுகிறது.

இதனிடையே, மத்திய சுற்றுச்சூல் துறை அமைச்சகம், உத்தரப் பிரதேச அரசு மற்றும் அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க கோரியிருந்தது.
இதைத் தொடர்ந்து தாஜ்மஹால் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் கண்டறியுமாறு ஆக்ரா மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர், பொதுப் பணித் துறை அதிகாரிகள், தொல்லியல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications