தலித்துகள் வீட்டுக்கு 'தேனிலவுக்கு' போகும் ராகுல்- அநாகரீகமாக பேசிய பாபா ராம்தேவ் மீது வழக்கு
டெல்லி: தலித்துகள் வீட்டுக்கு தேனிலவுக்காக ராகுல் காந்தி போகிறார் என்று யோகா குரு பாபா ராம்தேவ் அநாகரீகமாக பேசியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தேனிலவுக்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் தலித் வீடுகளுக்குச் செல்வதாக கூறியிருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராம்தேவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன் புகாரும் கொடுத்தது. ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், ராம்தேவின் பேச்சு தலித் மக்களுக்கு எதிரானது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேலும் சில தலித் அமைப்புகளின் நிர்வாகிகள், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமும் பெண்கள் ஆணையத்திடமும் ராம்தேவ் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ராம்தேவ் மீது லக்னோ போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications