சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஹைதராபாத்: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் பரப்பு ஏற்பட்ட நிலையில் தீ அணைக்கப்பட்டு சோதனைக்குப் பிறகு ரயில் தாமதமாகக் கிளம்பியது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து இரவு 10.30 மணியளவில் கிளம்பி, சுமார் 32 மணி நேரம் கழித்து சென்னை வந்தடையும். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 7.10 மணியளவில் வந்தடையும்.

அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 10.30க்கு டெல்லியில் இருந்து கிளம்பிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது இந்த ரயிலின் ஏ.சி பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தீ பிடித்ததை உடனடியாக கவனித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு, பொறியாளர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து, ரயில் மீண்டும் புறப்பட்டது. தீ விபத்து காரணமாக ரெயில் தாமதமாக சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications