பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்த பிரதமர் மோடி
நாட்டின் பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி..
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று 3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அமைச்சர்களாகினர்.
இணை அமைச்சர்களாக 9 பேர் பொறுப்பேற்றனர். நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

அருண் ஜேட்லி
பிரதமர் மோடி பதவியேற்ற போது நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி வசம் இருந்தது பாதுகாப்புத் துறை. பின்னர் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மனோகர் பாரிக்கர்
3 ஆண்டுகள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த மனோகர் பாரிக்கர் அண்மையில் கோவா மாநில முதல்வரானார். இதையடுத்து மீண்டும் அருண்ஜேட்லி வசமே பாதுகாப்புத் துறை வந்தது.

நிர்மலா சீதாராமன்
அமைச்சரவை மாற்றத்தின் போது நிதின் கட்காரிக்குதான் பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கி அசத்தியுள்ளார் பிரதமர் மோடி.

முதல் தமிழ் பெண்மணி
இதற்கு முன்னர் 1975, 1980-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரதமராக இருந்த இந்திரா காந்தி வகித்திருக்கிறார். முதல் முறையாக பாதுகாப்புத் துறைக்கு தனி பெண் அமைச்சராக நிர்மலா சீதாராமனை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications