For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணம் மாற்றம்: முதலில் சிரிப்பு... இப்போது கண்ணீரா? மோடிக்கு ராகுல் கேள்வி

ராகுல் காந்தி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏழைகளின் துயரத்தை பார்த்து முதலில் சிரித்த பிரதமர் மோடி இப்போது கண்ணீர்விடுகிறார்.. அவரது உண்மையான முகம் அம்பலமாகிவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் கடும் தவிப்பில் இருந்து வருகின்றனர்.

"First laughter now tears", Rahul comments on Modi

டெல்லியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரூ4,000 பணத்தை மாற்றியிருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில் கோவாவின் பனாஜியில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் ரூ4,000 ஐ மாற்ற வங்கிகளில் கியூவில் நிற்கிறார்கள் என ராகுல் காந்தி பெயரை குறிப்பிடாமல் சாடியிருந்தார்.

மேலும் நாட்டுக்காக குடும்பத்தையும் வீட்டையும் விட்டு வெளியே வந்தேன் என உருக்கமாக கண்ணீர்மல்கவும் பேசினார் மோடி. மோடியின் இந்த பேச்சுகள் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், முதலில் சிரிப்பு... இப்போது அழுகையா? உண்மை முகம் அம்பலமானது என சாடியுள்ளார் ராகுல் காந்தி.

English summary
Congress Vice President Rahul Gandhi' tweet said "First laughter now tears! Mediocrity comes face to face with reality".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X