Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2வது மனைவி மகள் மீது மட்டும் பாசமா? மகனை பலாத்காரம் செய்ய வைத்து உடலை ஆசிட் ஊற்றி சிதைத்த பெண்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகள் முறை சிறுமியை தன் மகனை வைத்து பலாத்காரம் செய்ய சொன்ன தாய்- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவது மனைவியின் மகளை, முதல் மனைவி தனது மகனை வைத்து பலாத்காரம் செய்து அவளது உடலை ஆசிட் ஊற்றி சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும் துன்புறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் பெண்களே பெண்களுக்கு எதிரியாகி கொடும் செயலில் ஈடுபடுவதும் கள்ளக்காதலால் கொலை செய்ய துணிவதும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

    இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவது மனைவியின் மகள் மீது கணவர் பாசமாக இருந்த காரணத்திற்காக அந்த குழந்தையை கொடூரமாக கொலை செய்து உடலை ஆசிட் ஊற்றி சிதைத்துள்ளார் தாய் முறையான ஒருவர்.

    சிறுமியின் உடல் கண்டுபிடிப்பு

    சிறுமியின் உடல் கண்டுபிடிப்பு

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக காவல் நிலயத்திற்கு அண்மையில் புகார் ஒன்று வந்தது. இந்நிலையில் அங்குள்ள காட்டு பகுதியில் சிறுமியின் உடல் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இரண்டு மனைவிகள்

    இரண்டு மனைவிகள்

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    அதாவது காணாமல் போன சிறுமியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்துள்ளனர்.

    அடிக்கடி சண்டை

    அடிக்கடி சண்டை

    இந்நிலையில் தனது கணவர் இரண்டாவது மனைவியின் குழந்தை மீது அதிக பாசமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி கணவரோடு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    பெண் குழந்தை மீது பாசம்

    பெண் குழந்தை மீது பாசம்

    ஆனால் கணவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை மீது பாசமாகவே இருந்துள்ளார்.

    சிறுமி கடத்தல்

    சிறுமி கடத்தல்

    இதனை கொஞ்சமும் விரும்பாத முதல் மனைவி ஒரு கட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகளை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்த சிறுமியை தனது மகன் உட்பட 4 பேருடன் கடத்தி காட்டுபகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    கூட்டு பலாத்காரம்

    கூட்டு பலாத்காரம்

    பின்னர் தனது 14 வயது மகன் உட்பட 4 பேரையும் விட்டு அந்த 9 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். சிறுமியின் வளர்ப்புத் தாய் முன்னே இந்த பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

    கண்களை நோண்டி, மண்டையை உடைத்து

    கண்களை நோண்டி, மண்டையை உடைத்து

    அதுமட்டுமின்றி சிறுமியின் கண்களையும் நோண்டியுள்ளனர். சிறுமியின் ஒன்றுவிட்ட அண்ணன், அவரது மண்டையை கோடாரியால் உடைத்துள்ளார்.

    சிறுமியின் உடலில் அமிலம்

    சிறுமியின் உடலில் அமிலம்

    பின்னர் சிறுமியின் உடல் பகுதியிலும் அமிலத்தை வீசியுள்ளனர். பின்னர் அங்குள்ள புதர் ஒன்றில் சுதாவின் சிதைந்த உடலை போட்டுவிட்டு இலைகளை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    பெரும் அதிர்ச்சி சம்பவம்

    பெரும் அதிர்ச்சி சம்பவம்

    இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்புத் தாய் அவரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். மகள் முறையான சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+