ஆந்திராவில் ஜாதி அடிப்படையில் 5 துணை முதல்வர்கள்- ஜெகன் மோகன் அதிரடி
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் 5 துணை முதல்வர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக நியமித்துள்ளார். ஜாதிய அடிப்படையில் துணை முதல்வர்களை நியமித்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் ஜெகன் மோகன்.
ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதல்வரானார் ஜெகன் மோகன் ரெட்டி. லோக்சபா தேர்தலிலும் ஆந்திராவில் அசைக்க முடியாத சக்தியாக ஜெகன் மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார்.

முதல்வராக பதவியேற்ற ஜெகன் அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நடைமுறையாக 5 துணை முதல்வர்களை நியமித்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
அதுவும் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் காப்பு சமூகம் என பிரித்து சமூகத்துக்கு ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்க உள்ளனர்.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் தமது அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications