19 புதிய அமைச்சர்களை சேர்த்துக் கொண்டு 5 பேருக்கு ஆப்பு வைத்த மோடி!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 5 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான முக்கிய அமைச்சர்கள் குழு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தி வந்தது.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2வது முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்பு விழா முடிவடைந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ரசாயன மற்றும் உர துறை இணை அமைச்சர் நிஹல்சந்த் மேக்வால், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதீரியா, நீர்வளத் துறை இணை அமைச்சர் சன்வர் லால் ஜாட், பழங்குடியின விவகாரத்துறை இணை அமைச்சர் மன்சுக்பாய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் டி.பாஸ்வா, எம்.கே.குந்தாரியா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 78 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications