Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாஷ்பேக் 2014: முதல்வர் பதவி, ராஜினாமா, வழக்கு... அதிக ‘அடி’ வாங்கிய கெஜ்ரிவால்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருந்தது என்பது மறுக்க முடியாதது.

கட்சி ஆரம்பித்த ஓராண்டு காலத்திற்குள் டெல்லியில் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு மக்களிடம் ஆதரவைப் பெற்ற ஆம் ஆத்மி, வளர்ந்த வேகத்திலேயே மக்களிடன் வெறுப்பையும் சம்பாதித்தது.

டெல்லி முதல்வராக இந்தாண்டைத் துவக்கிய கெஜ்ரிவால், தனது அவசர முடிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தற்போது மீண்டும் டெல்லி தேர்தலில் போட்டியிட தயாராகி உள்ளார்.

டெல்லியில் ஆட்சி...

டெல்லியில் ஆட்சி...

கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 28ல் வெற்றி பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபித்தது ஆம் ஆத்மி. காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.

கட்சிக்குள் சிக்கல்...

கட்சிக்குள் சிக்கல்...

மின் கட்டண குறைப்பு, இலவச குடிநீர் உள்ளிட்ட பல கவர்ச்சியான உறுதிமொழிகளுடன் ஆட்சி பீடம் ஏறிய ஆம் ஆத்மி, தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. கெஜ்ரிவாலுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது.

49 நாட்கள் ஆட்சி...

49 நாட்கள் ஆட்சி...

ஜன்லோக்பாலை நிறைவேற்ற முடியாததை காரணம் காட்டி, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப் பட்டது. ஆம் ஆத்மியின் இந்த திடீர் முடிவால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தாக்குதல்...

தாக்குதல்...

இதனால், கெஜ்ரிவால் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவர் மீது தங்களது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டத் தொடங்கினர். சிலர் வெறும் கைகளாலும், சிலர் மை, அழுகிய முட்டை, கல் போன்ற பொருட்களின் உதவியோடும் தாக்குதல் நடத்தினர்.

மோடிக்கு போட்டியாக...

மோடிக்கு போட்டியாக...

இதற்கிடையே லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. எனவே, அடுத்தபடியாக பிரதமர் பதவியைப் பிடிக்கும் முடிவை எடுத்தது ஆம் ஆத்மி. எனவே, பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்கினார் கெஜ்ரிவால்.

தகர்ந்த பிரதமர் கனவு...

தகர்ந்த பிரதமர் கனவு...

லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது பாஜக. இதனால் தேசிய அளவில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது உறுதியானது. ஆம் ஆத்மி எல்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயல்வதாக அடுத்த அஸ்திரத்தை கெஜ்ரிவால் கையில் எடுத்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்தது.

மான நஷ்ட வழக்கு... கைது

மான நஷ்ட வழக்கு... கைது

ஊழல்வாதிகளின் பெயர்ப் பட்டியல் என்ற ஒன்றை வெளியிட்டார் கெஜ்ரிவால். அதில் முக்கிய கட்சித் தலைவர்களின் பெயர்களும் இருந்தது. உரிய ஆதாரம் இல்லாமல் தன்னை ஊழல்வாதி என அவதூறு பரப்பியதாக பாஜக தலைவர் நிதின்கட்காரி கெஜ்ரிவால் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது ரூ. 10,000 க்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ஏற்க மறுத்ததால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு...

கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு...

இது ஒருபுறம் இருக்க டெல்லி சட்டசபையைக் கலைக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் கெஜ்ரிவால். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டெல்லியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்குமாறு கவர்னருக்கு உத்தரவிட்டது. தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு அனைத்து கட்சிகளும் டெல்லியில் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த குடியரசுத் தலைவருக்கு அவர் சிபாரிசு செய்தார்.

மீண்டும் முதல்வர் வேட்பாளர்...

மீண்டும் முதல்வர் வேட்பாளர்...

இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் ஆம் ஆத்மி மட்டும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மீண்டும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக கெஜ்ரிவாலே களம் இறக்கப் படுகிறார் என்ற பேச்சும் உள்ளது.

காலதாமதமான முடிவு...

காலதாமதமான முடிவு...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்குப் பின்னர் காலதாமதமாக தான் தவறான முடிவு எடுத்து விட்டதை உணர்ந்தார் கெஜ்ரிவால். இதனால் தனது பேட்டிகள் மற்றும் உரைகளில் மீண்டும் டெல்லி முதல்வரானால் நிச்சயமாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன் என வாக்குறுதி தந்து வருகிறார்.

கல்லடி, சொல்லடி...

கல்லடி, சொல்லடி...

டெல்லி முதல்வர் என மக்கள் செல்வாக்குடன் கம்பீரமாக இந்த ஆண்டைத் தொடங்கிய கெஜ்ரிவால், தனது அவசர முடிவால் முதல்வர் பதவியை இழந்து மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடன் கேட்டு, கல்லடி, சொல்லடி தாக்குதலுக்கு ஆளாகி இந்த ஆண்டை நிறைவு செய்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+