ரகளை பயணிகளை அடக்க கைவிலங்கு, நைலான் கயிறு பயன்படுத்தும் விமான நிறுவனங்கள்
டெல்லி: வெளிநாட்டு விமானங்களை போன்று இந்திய விமானங்களிலும் சேட்டை செய்யும் பயணிகளை இருக்கையுடன் கட்டிப் போட பிளாஸ்டிக் கைவிலங்குகள் பயன்படுத்தப்பட உள்ளன.
விமானங்களில் பயணம் செய்வோரில் சிலர் திடீர் என்று இருக்கைகளில் இருந்து எழுந்து ரகளை செய்கிறார்கள். விமான சிப்பந்திகளுடன் பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள். சிலர் விமானம் நடுவானில் பறக்கையில் கதவை திறக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்நிலையில் சேட்டை செய்யும் பயணிகளை இருக்கையுடன் கட்டிப் போட பிளாஸ்டிக் கைவிலங்குகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அண்மையில் அனுமதி அளித்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கடந்த ஆண்டு இறுதியில் தான் அனுமதி அளித்தது. விரைவில் விமான பயணத்தின் பாதுகாப்பு கருதி ரகளை பயணிகளை கட்டுப்படுத்தும் கருவிகளை பயன்படுத்த உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயணிகளை கட்டுப்படுத்த கைவிலங்குகளை எடுத்துச் செல்வதுடன், சிப்பந்திகளுக்கு தற்காப்பு கலையும் கற்றுக் கொடுத்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் அனைத்து விமானங்களிலும் நைலான் கயிறு எடுத்துச் செல்லப்படுவதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications