மொத்தமாக உடையும் நிலையில் கொள்ளிடம் இரும்பு பாலம்.. அதிகாரிகள் ஆய்வு!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: காவிரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் வரும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த விரிசல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது.

கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த இரும்பு பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட்ட பின் பழைய கொள்ளிடம் இரும்பு பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. இப்போதும் அது தொடர்கிறது.

பெரிய விரிசல்
இந்த நிலையில்தான் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், அதிக எடை கொண்ட வாகனங்களை ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த பகுதியில் விரிசல்
கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தண்ணீர் மிக அதிகமான வேகத்தில் செல்கிறது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டது. இது சிமெண்டு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட தூண் ஆகும்.

அதிக விரிசல்
நேரம் போக போக பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. பாலத்தின் 18வது தூண் மொத்தமாக இடியும் நிலையில் உள்ளது. பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த விதமான வாகனங்களையும் ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications