Breaking News: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. தமிழகத்திற்கு வெள்ள எச்சரிக்கை

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது கபினியிலுருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி 120.85 அடியை தாண்டியுள்ளது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 Flood warning: 1,42,000 cubic feet of water released in Cauvery -LIVE UPDATES

Aug 12, 2018, 1:10 pm IST

காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

காவிரி வெள்ளம் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

சமூக வலைதளங்களில் மக்கள் வெள்ளம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்

பேரிடர் மேலாண்மை மீட்புக்கு, அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு

1077, 1070 எண்களை தொடர்பு கொள்ளலாம் - அமைச்சர் உதயகுமார்

Aug 12, 2018, 1:08 pm IST

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

ஸ்டெர்லைட்டை நிர்வாக பணிக்கு திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது

இதையடுத்து தமிழக முதல்வர் அவசர ஆலோசனை

துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

Aug 12, 2018, 11:58 am IST

கேரளா வெள்ளம்: திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்படும் - ஸ்டாலின்

Aug 12, 2018, 11:38 am IST

கேரளாவில் இனியும் மழை தொடரும் - வெதர்மேன்

மேட்டூர் அணைக்கு இன்னும் நீர் வர வாய்ப்புள்ளது - வெதர்மேன்

Aug 12, 2018, 11:37 am IST

அடுத்த ஒரு வாரம் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும்

தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் - வெதர்மேன்

தமிழகத்தில் வால்பாறை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லையில் மழை பெய்யும்

Aug 12, 2018, 10:40 am IST

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்பு

ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு

முதல்வர், துணை முதல்வர், ஆளுநர், முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விழாவில் பங்கேற்பு

Aug 12, 2018, 8:42 am IST

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

10 நாட்களுக்கு முன் கோவை போலீஸ் ஹீலர் பாஸ்கரை கைது செய்தது

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்ததால் கைது

Aug 12, 2018, 8:23 am IST

கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

கேரளாவில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு

150க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை

50,000 பேர் மீட்பு முகாம்களில் தங்க வைப்பு

Aug 12, 2018, 8:23 am IST

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 42,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+