கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா?.. தப்புமா?
டெல்லி: கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதில் குமாரசாமி ஆட்சி கவிழுமா, இல்லை தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சுமார் 15 மாத கால ஆட்சியில் முக்கிய இலாகா, அமைச்சர் பதவி ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

காரசார விவாதங்கள்
எனினும் சபாநாயகர் இவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை. இதனால் 15 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
அப்போதே சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இன்றைய தினத்துக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

சபாநாயகர்
இந்த நிலையில் இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது.

ரஞ்சன் கோகாய்
அது போல் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என பரபரப்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது. நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியின் ஆட்சி தப்புமா இல்லை கவிழுமா என்பது குறித்து நாளை தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications