இமாச்சலப் பிரதேசத்தில் வெடித்த மழை மேகம்.. பெரு வெள்ளத்தால் உருக்குலைந்த வீடுகள்! 50 பேர் காணவில்லை
சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் மேலும் ஒரு வாரத்திற்கு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் ராஜ்வான் மாவட்டத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. கனமழை நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேரை காணவில்லை. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கின்றன.
மீட்பு பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்திருக்கின்றனர். ஆனால், தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. செல்போன் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ளவர்களை தொடர்புகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், "இமாச்சலப் பிரதேசம் மிகப்பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 50 பேரை காணவில்லை. 2 பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். மீட்பு பணிக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை நாடியுள்ளோம்.
அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாலங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. எனவே மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர், காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ட்ரோன் கொண்டும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications