நடிகை தமன்னா மீது காலணி வீச்சு.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ஹைதராபாத்: நடிகை தமன்னா மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா.
தமன்னா நேற்று ஹைதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார்.

செருப்பு வீச்சு
அப்போது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, ஜுவல்லரியில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை. ஆனால் அருகில் நின்றிருந்த கடை ஊழியர் மீது விழுந்தது.

விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும், ரசிகர்களும் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த இன்ஜினீயர் என்றும் தெரியவந்தது. செருப்பு வீச அவர் கூறிய காரணம்தான் இன்னும் அதிர்ச்சி.

வாக்குமூலம்
நடிகை தமன்னாவின் சமீபத்திய படங்களில் அவரது கதாபாத்திரங்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாக கரிமுல்லா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் கரிமுல்லாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவர்ச்சி காரணம்
பாகுபலி-1 திரைப்படத்தில் தமன்னா கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆனால் பாகுபலி-2ல் புரட்சி பெண் என்ற அளவில் மட்டுமே சிறிய நேரம் வந்து சென்றார் தமன்னா. தமன்னா கவர்ச்சியாகவும், ஹீரோக்களுடன் நெருக்கமாகவும் நடிப்பதுதான் கரிமுல்லாவின் கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications