ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கு: 287 தமிழர்களையும் விடுதலை செய்து கோர்ட் தீர்ப்பு
திருப்பதி: ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுத்த இரு அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 287 பேர் உட்பட மொத்தம் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி திருப்பதி சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
2013ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி திருப்பதி அருகே, வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்க முயன்ற அம்மாநில வனத்துறை அதிகாரிகள் டேவிட் கருணாகர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த 349க்கும் மேற்பட்டோரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வழக்குத் தொடர்ந்தனர். மொத்தம் 454 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், அதில் 82 பேர் இன்னமும் தலைமறைவாக இருப்பதாகவே கணக்கு காட்டப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 60க்கும் மேற்பட்ட ஆந்திராவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். மீதமிருந்த தமிழர்கள் விசாரணைக் காலம் முழுவதும் கடந்த2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு திருப்பதி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் ஆஜர்படுத்த கோர்ட் வளாகம் போதாது என்பதால், திருப்பதியிலுள்ள, உள் விளையாட்டு அரங்கம் கோர்ட்டாக மாற்றப்பட்டிருந்தது. இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் 287 மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் உட்பட 349 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், இவர்களுக்கு எதிராக ஆந்திர அரசும், ஆந்திர காவல்துறையும் தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தார் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர். 2 ஆண்டு சிறைவாசத்தின்போது 5 தமிழர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள்எண்ணிக்கை 292 ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications