கேரளாவில் வனத்துறை சோதனைச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 3 ஊழியர்கள் கடத்தப்பட்டு விடுவிப்பு!
மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் பூக்கோட்டுப்பாறை என்ற இடத்தில் வனத்துறையின் சோதனை சாவடி மீது மாவோயிஸ்டுகள் நேற்று தாக்குதல் நடத்தினர். அத்துடன் 3 வனத்துறை ஊழியர்களையும் அவர்கள் கடத்திச் சென்று பின்னர் விடுதலை செய்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் காலூன்றி உள்ளனர். அட்டப்பாடி, நிலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையேயான மோதல் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் மலப்புரத்தில் டி.கே. காலனி என்ற பகுதியில் பூக்கோட்டுப்பாறையில் வனத்துறையின் செக்போஸ்ட் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அத்துடன் அங்கு பணியில் இருந்த 3 வனத்துறை ஊழியர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் கடத்திச் சென்றனர்.
பின்னர் திடீரென 3 பேரையும் மாவோயிஸ்டுகள் விடுதலை செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து வனப்பகுதி சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக- கேரளா எல்லையில் நாடுகாணி காவல்துறையில் பலத்த சோதனைகளுக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications