இந்த இந்திராணியின் இந்திரஜாலத்திற்கு அளவே இல்லையோ?
மும்பை: ஷீனாவை கொலை செய்த பிறகு தன்னிடம் பணியாற்றிய பெண் ஒருவரை வைத்து தனது மகளின் கையெழுத்தை போட வைத்துள்ளார் இந்திராணி.
ஷீனா போரா கொலை வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஷீனா கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி தனது தாய் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்திராணி செய்த வேலை ஒன்று பற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில்,

ஷீனா
ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து ஷீனா வேலைக்கு வராததால் அவரது அலுவலகத்தில் இருந்து அவரது செல்போனுக்கு அடிக்கடி போன் செய்துள்ளனர். போனை எடுத்த இந்திராணி ஷீனா போன்று பேசி தான் வெளிநாடு செல்வதால் வேலையை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதம்
வேலையை விட்டு விலகுவதாக இருந்தால் முறையாக கடிதம் அனுப்புங்கள் என்று அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். அதற்கு இந்திராணி தன்னிடம் பணிபுரிந்த பெண் ஒருவரிடம் ராஜினாமா கடிதம் எழுதுமாறு கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் ஷீனா போன்று கையெழுத்திடுமாறும் கூறியுள்ளார்.

இமெயில்
இந்திராணி இமெயில் மூலம் ஷீனாவின் கையெழுத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஷீனாவின் கையெழுத்து தொடர்பாக இந்திராணி மற்றும் அந்த பெண் இடையே 21 இமெயில்கள் சென்றுள்ளன.

வீடு
ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாகக் கூறி தான் இந்திராணி தன்னிடம் வேலை பார்த்த பெண்ணை போலிக் கையெழுத்து போட வைத்துள்ளார். அவரை வைத்தே ஷீனா வாடகைக்கு இருந்த வீட்டின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளார் இந்திராணி. போலி கையெழுத்திட்ட பெண்ணை நாங்கள் சாட்சியமாக ஆக்க உள்ளோம் என்றார் போலீஸ் அதிகாரி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications