ஜஸ்வந்த்சிங் நிலைமை தொடர்ந்து கலைக்கிடம்: மன்மோகன்சிங் நேரில் பார்த்தார்
பெங்களூர்: தலையில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கவலைக்கிடமான நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று ஜஸ்வந்த் சிங் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதி அமைச்சர் பதவி வகித்தவர், ஜஸ்வந்த் சிங் (76). வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார்.

பாஜக தலைவரான அவருக்கு அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் அனுமதி மறுத்தது. இதைத் தொடர்ந்து அவர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜஸ்வந்த்சிங் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டின் தரையில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார். அவரது தலையின் பின் பக்கம் பலத்த காயமும் ஏற்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது ஜஸ்வந்த்சிங் கோமா நிலையில் இருப்பதும், தலையின் பின்பக்கத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருடைய தலை உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் காயமடைந்த மண்டையோட்டின் அடிப்பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பதும், மூளைப்பகுதி வீங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு உயிரை காக்கும் அறுவை சிகிச்சையை டாக்டர்கள் உடனடியாக மேற்கொண்டனர். அதற்கான உபகரணங்களும் பொருத்தப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
ஜஸ்வந்த்சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதை அறிந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் நேற்று காலை ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் அவரது உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
இன்று காலை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் துணைத்தலை ராகுல் காந்தி ஆகியோர் ஜஸ்வந் சிங்கை அனுமதிக்கபட்ட மருத்துவனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.மேலும் அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications