ஊழல் நடந்ததில் உண்மை இல்லை என நீதிமன்றமே சொல்லிவிட்டது... தீர்ப்புக்கு ப.சிதம்பரம் "ஹேப்பி வெல்கம்"!
2ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்ததாக சொன்னதில் உண்மையில்லை என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியவந்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி : 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டீல் முறைகேடு நடந்திருப்பதில் உண்மையில்லை என்று சிபிஐ நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஐமுகூ அரசு மிகப்பெரிய ஊழல் செய்ததாக சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது இன்றைய தீர்ப்பின் மூலம் தெரிந்திருக்கும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரிதும் பரபரப்பா பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு 6 முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஐமுகூ அரசின் உயர்மட்ட அளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்பதை நீதிமன்ற தீர்ப்பு உணர்த்தியுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications