குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிக்கிய மாஜி ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு ஓய்வுக்கு பின் புரமோசன்
அகமதாபாத்: குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டவரும் ஓய்வு பெற்றவருமான சர்ச்சைக்குரிய ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக மோடி, உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த காலங்களில் என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் சோராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்குகள் மிக முக்கியமானவை.

இந்த வழக்குகளில் 2007-ம் ஆண்டு அமித்ஷா, குஜராத் போலீஸ் அதிகாரி வன்சரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்குகளில் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் வன்சரா. 2015-ல் ஜாமீனில் விடுதலையானார்.
சிறையில் இருந்த போது, போலி என்கவுண்ட்டருக்கு காரணமே மோடியும் அமித்ஷாவும்; அவர்கள்தான் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என வன்சரா வெளியிட்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியது. சிறையில் இருந்த நிலையில் 2014-ல் வன்சரா ஓய்வும் பெற்றார்.
பின்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார். அதேபோல் வன்சராவும் அனைத்து வழக்குகளில் இருந்தும் 2019-ல் விடுவிக்கப்பட்டார்.
தற்போது வன்சரா ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்நிலையில் வன்சராவுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி குஜராத் அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications