ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு!
சிம்லா: ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் ஷைல்சா கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் தெரிவித்தார்.
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷைல்சாவின் உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் சாந்த குமார் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமார். இவரது மனைவி சந்தோஷ் ஷைல்சா. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தகுமார் உடல்நல குறைவு காரணமாக, காங்க்ரா மாவட்டம் தாண்டாவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சந்தோஷ் ஷைல்சாவுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சந்தோஷ் ஷைல்சா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் சந்தோஷ் ஷைல்சாவின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். சாந்தகுமாரின்குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் அவரது தனிப்பட்ட செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications