சிஎஸ்கே டூ அரசியல்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு! வரவேற்ற முதல்வர்
அமராவதி: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்தவர் அம்பாதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயராக வலம் வந்தார். அணி இக்கட்டான சூழலில் தவிக்கும்போது அம்பாதி ராயுடு தனது சிறப்பான பேட்டிங் திறமையால் தான் விளையாடிய அணிகளுக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் வெற்றிக்கு இவரது பங்கு என்பது முக்கியமானதாகும். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக அம்பாதி ராயுடு விளையாடினார். அதில் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் அவர் ஓய்வை அறிவித்தார்.
இதன்மூலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் அவர் விடைபெற்றார். இதையடுத்து அம்பத்தி ராயுடு விரைவில் அரசியல் கட்சியில் இணையலாம் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டன. அம்பாதி ராயுடு ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு ஆட்சி செய்யும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.
அதன்படியே அம்பாதி ராயுடு இன்று அரசியல் பிரவேசம் செய்தார். அவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த வேளையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அவருக்கு சால்வை மற்றும் கட்சியின் துண்டு போர்த்தி வரவேற்றனர்.
இதுதொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கரிஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு, முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் முகாம் அலுவலகத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாதி ராயுடு தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் அவர் வரும் நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அம்பாதி ராயுடு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தான் மசூலிப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவுகிறது. இருப்பினும் இது சாத்தியமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications