நவீன் பட்நாயக்கிற்காகவே வந்தேன்.. பதவி ஆசையால் வரவில்லை.. அரசியலில் இருந்து வி.கே.பாண்டியன் விலகல்!
புவனேஸ்வர் : அரசியலில் இருந்து விலகுவதாக ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் பாஜக 78 இடங்களையும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களையும் பிடித்தது. தனி பெரும்பான்மைக்கு 74 இடங்களே போதும் என்ற நிலையில், பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

இதன்பின் 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் பதவியை ராஜினாமா செய்தார். பிஜு ஜனதா தளம் கட்சியின் தோல்விக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் உதவியாளருமான வி.கே.பாண்டியன் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. ”ஒடிசாவை தமிழர் ஆளலாமா” என்று பிரச்சாரத்தின் போதும் பாஜகவினர் தீவிரமான பேசி வந்தனர்.
இதனிடையே தேர்தல் முடிவுகளுக்கு பின் வி.கே.பாண்டியன் யார் கண்களிலும் படவில்லை. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒடிசா சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. கட்சியில் சேர்ந்தாலும், அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு இல்லை என்றும் பலமுறை கூறிவிட்டேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வி.கே. பாண்டியன் வெளியிட்டுள்ள வீடியோவில், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதில், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி செய்வதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தேன். எந்தவொரு பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை. நான் ஐஏஎஸ் பணியில் சேரும் போது இருந்த சொத்துக்களே இப்போதும் என்னிடம் உள்ளன. மூதாதையர்களின் சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
எனக்கோ, என்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கோ உலகில் சொத்துக்களே இல்லை. மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். அதன் மூலமாக ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். நவீன் பட்நாயக்கிடம் நான் கற்றுக் கொண்டது எனது வாழ்நாள் முழுமைக்கும் பயன் கொடுக்கும். நவீன் பட்நாயக்கின் அனுபவம், நேர்மை, மக்கள் மீதான அவரின் அன்பு தனக்கு ஊக்கம் அளித்தது.
ஒடிசா மீதான நவீன் பட்நாயக்கின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த நான் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அவர் எதிர்பார்ப்பாக இருந்தது. சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்தது நவீன் பட்நாயக் அரசு. இளைஞர்களுக்காகவும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் உழைத்தது எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. ஒடிசாவின் பள்ளிகளை மேம்படுத்துவதில் நான் அரசு பள்ளியில் படித்த அனுபவமே கை கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications