Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

Subscribe to Oneindia Tamil
manmohan singh health condition
GETTY IMAGES/SEAN GALLUP
manmohan singh health condition

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை புதன்கிழமை இரவு தெரிவித்திருந்தது.

மன்மோகன் சிங் விரைவில் குணமடையவும் நலமுடன் இருக்கவும் தாம் பிராத்திப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1448504747426672647

2004 மே முதல் 2014 மே வரை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் உடல்நிலை தொடர்பாக பரவிய வதந்தி

இந்நிலையில் மன்மோகன் சிங் தொடர்பாக பரவிய வதந்தி குறித்து காங்கிரஸ் விளக்கமளித்திருந்தது. "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து பகிருவோம்," என காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரனாவ் ஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பிரிவினை முதல் பிரதமர் வரை

1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா எனும் கிராமத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.

தற்பொழுது அந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.

தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்ற மன்மோகன் சிங் 1962இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பதற்றம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கௌரவம் மிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் சிங்.

1971இல் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972இல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங்.

1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இந்திய நிதி அமைச்சராக இருந்தார் மன்மோகன் சிங்
AFP
நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இந்திய நிதி அமைச்சராக இருந்தார் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட போது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா இருந்தது.

அந்த காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன்சிங் நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படும் மன்மோகன் சிங், 1991-1996 ஆட்சிக் காலத்தில் நரசிம்ம ராவ் உடன் இணைந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அமலாக்கினார்.

சிறந்த நிதி அமைச்சருக்கான 'ஆசியா மணி அவார்ட்' (Asia Money Award for Finance Minister of the Year) விருதை 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், 'யூரோ மணி அவார்ட்' (Euro Money Award for Finance Minister of the Year) விருதை 1993ஆம் ஆண்டிலும் பெற்றார் மன்மோகன் சிங்.

1987இல் இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றவர் மன்மோகன் சிங்.

2004 தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்தபின் மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+