மன்மோகன் சிங் மறைவுக்கு அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு! கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூச்சுத்திணறல் காரணமாக டிசம்பர் 26 இரவு 8 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், 9.51 மணிக்கு காலமானார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக மத்திய அரசு சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் எந்தவித அரசு விழாக்கள் நடைபெறாது. மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. பொதுவாக முன்னாள் பிரதமர்கள் மறைந்தால், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும், அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் இதுகுறித்து இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications