பாஜகவில் இணைந்தார் 'ஆம் ஆத்மி' கிரண் பேடி: கேஜ்ரிவாலுக்கு எதிராக முதல்வர் வேட்பாளராகிறார்!
டெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார்.
ஊழலுக்கு எதிரான ஜனலோக்பால் மசோதா வேண்டி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக இருந்து வந்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி. இந்நிலையில் அவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஹர்ஷ்வர்தன், டெல்லி பாஜக தலைவர் சதிஷ் உபத்யாய, எம்.பி. விஜய் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜகவில் சேர்ந்துள்ள கிரண் பேடி டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆனால் பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக்கி ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுக்கும் என்று தெரிகிறது.
கிரண் பேடியின் வரவு கட்சிக்கு பலம் அளிக்கும் என்றும், அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி கட்சியின் நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இது குறித்து கிரண் பேடி கூறுகையில்,
நான் பிரதமர் மோடியின் அருமையான தலைமை குணத்தை பார்த்து தான் பாஜகவில் இணைந்துள்ளேன். டெல்லிக்கு சக்திவாய்ந்த, ஸ்திரத்தன்மை கொண்ட அரசு தேவை. நான் டெல்லியின் நலனுக்காக பாடுபடுவேன். இதற்காக பாஜக எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications