அடுத்த பட்டியலில் 4 காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் ?
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்பிரமுகர்கள் நால்வர் மீதான விசாரணை இறுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, கருப்பு பணம் தொடர்பான வழக்கில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், மூன்று தொழிலதிபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், படிப்படியாக கருப்பு பணம் வைத்துள்ள அனைவர் பெயர்களையும் வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அடுத்த பட்டியல் வெளியாகும்போது காங்கிரஸ் கட்சி பெரும் அதிர்ச்சியை சந்திக்கும் என்று தெரிவித்தார்.

அதேபோலத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகளும் உள்ளன. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கருப்பு பணத்தை சேமித்து வைத்துள்ள, காங்கிரஸ்காரர்கள் நால்வர் மீது பிடி இறுகியுள்ளது. அதில் இருவர், மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னணி அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். இதேபோல மத்திய முன்னாள் அமைச்சர் ஒருவரும், உத்தர பிரதேச முன்னாள் எம்.பியும் இந்த பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெகுவிரைவில் இவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கருப்பு பணம் வைத்திருப்போர் பெயர் வெளியானால் அதற்கு அந்த நபர்தான் அதிர்ச்சியடைய வேண்டுமே தவிர காங்கிரஸ் அதிர்ச்சியடைய தேவையில்லை" என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications