மணிபூரில் முதல்வர் வீட்டுக்கு அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

மணிபூர் தலைநகரான இம்பாலில் உள்ள பீரோதான் பள்ளி அருகே இருக்கும் க்வைராம்பந்த் மார்க்கெட் வளாகத்தில் நேற்று காலை 6 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடம் அம்மாநில முதல்வர் இபோபி சிங் வீட்டில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டை மார்க்கெட் வளாகத்தில் வைத்தார்களா அல்லது வீசிவிட்டுச் சென்றார்களா என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications