Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத வெறியாட்டம்- ராணுவ அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படையினர் வீரமரணம்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் ராணுவ அதிகாரி உட்பட பாதுகாப்புப் படையினர் 4 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா நகரில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் திங்கள்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் கூட்டாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

kashmir army

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி உட்பட பாதுகாப்புப் படையினர் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 5 பாதுகாப்புப் படையினர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய தாக்குதலுக்கு காஷ்மீர் புலிகள் என்ற புதிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. முஜாஹிதீன் எனப்படும் பயங்கரவாதிகளுக்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாக காஷ்மீர் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதே காஷ்மீர் புலிகள் இயக்கம்தான் சில நாட்களுக்கு முன்னர் கதுவாவில் ராணுவ வாகனத் தொடரணி மீதும் தாக்குதல் நடத்தி இருந்தது.

பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து தோடா பகுதியில் பெருமளவு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் அதிதீவிர உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+