திராவிட மாடலில் யோகி அரசு. . பெண்களுக்கு இலவச பஸ் பயணம். . ஆனால் 48 மணிநேரத்திற்கு மட்டுமே
போபால்: சென்னையில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவைகள் அளித்து வரும் நிலையில், இதை பின்பற்றும் வகையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை 2 நாட்களுக்கு அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிக்காட்டக்கூடிய இந்த பண்டிகை வட மாநிலங்களில் மிகவும் பிரபலம்.

ரக்ஷா பந்தன் பண்டிகை
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையையொட்டி, சகோதரர்கள் தனது சகோதரிகளுக்கு பாசத்தை வெளிக்காட்டுவதற்காக கயிறு கட்டுவர். மேலும் சர்பிரைசாக பரிசுகளை கொடுத்து அசத்துவார்கள். அதாவது தான் மஞ்சள் கயிறு கட்டும் சகோதரிக்கு நான் எப்போது பாதுகாப்பாளராக இருப்பதாக உறுதிகொள்ளும் நிகழ்வு தான் ரக்ஷா பந்தனர்.

பெண்கள் பாதுகாப்பு
இந்த நிலையில் ரக்ஷா பந்தனையொட்டி தற்போதைய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அலுவலகம் அனைவருக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. அந்த பதிவில், ''அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். சகோதர-சகோதரிகளுக்கிடையேயான அன்பு மற்றும் மரியாதையின் சிறப்பான மற்றும் ஆழமான பாசப் பிணைப்பின் கொண்டாட்டமாகும். இந்த புனிதமான நாளில், பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் நான் அனைவரும் உறுதிகொள்வோம்'' பதிவிட்டுள்ளார்.

2 நாள் இலவச பயணம்
இந்த நிலையில், துணை குடியரசு தலைவரின் பெண்கள் பாதுகாப்பு குறித்த பதிவினை நிறைவேற்றவும், ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டியும், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா' என்ற 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்கள் பயணத்தை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்டு 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 2 நாட்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஆகஸ்டு 10-ந்தேதி இரவு 10 மணி முதல் 12- ந் தேதி வரை 48 மணி நேரத்துக்கு பெண்களுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது, இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

திராவிட மாடலை போல. .
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த 2 நாட்களுக்கு இந்த சேவையை அறிவித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்த இந்த திட்டத்தை யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் பின்பற்றியுள்ளது திராவிட மாடலை காப்பியடிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பஸ்களில் பயணிக்க பெண்களுக்கு கட்டணமில்லை என்று அறிவிப்பு வெளியாகி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் இந்த பஸ்களை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக புதிதாக பிங்க் நிற பஸ்களை உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications