இஸ்லாமியருக்கு பாஜக பரிசு.. பக்ரித், மொகரத்துக்கு 2 இலவச சிலிண்டர்.. காஷ்மீரில் அமித்ஷா அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பக்ரீத், மொகரம் பண்டிகையின்போது 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக தனித்து களமிறங்கி உள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது.
முதற்கட்டமாக கடந்த கடந்த 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதையடுத்து 2வது கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தம் 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 8 ம்தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
10 ஆண்டுக்கு பின் தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் எத்தனை சட்டசபை தொகுதி இருக்கு தெரியுமா? 4 முனை போட்டி
இந்நிலையில் தான் 2வது மற்றும் 3வது கட்ட தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மேன்தார் என்ற நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் பற்றி பேசினார். இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
"கொடுமையான 370".. காஷ்மீரில் ஒரு ஜாதிக்கே பறிக்கப்பட்ட ஓட்டுரிமை.. 67 ஆண்டு தடை சிதைந்தது எப்படி?
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பக்ரீத் மற்றும் மொகரம் பண்டிகையின்போது 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஜம்மு காஷ்மீரில் அப்துல்லா, முப்தி மற்றும் நேரு - காந்தி குடும்பம் 90ஸ் காலத்தில் இருந்து பயங்கரவாதத்தை பரப்பியது. இந்த தேர்தல் என்பது ஜம்மு காஷ்மீரில் இந்த 3 குடும்பத்துக்கும் முடிவுரை எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்த 3 குடும்பங்களும் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது.
இன்னொரு புறம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து இருக்கிறது. கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களின் கைகளில் பிரமதர் மோடி லேப்டாப் கொடுத்துள்ளார். 2014ல் மட்டும் பிரதமர் மோடியின் அரசு மத்தியில் அமையாமல் இருந்திருந்தால் பஞ்சாயத்து, பிளாக் மற்றும் மாவட்ட தேர்தல்கள் என எதுவுமே நடந்து இருக்காது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி 35 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இந்த ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரித்தது. 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் நாட்கள் அதாவது 8 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மொத்தமாக முடக்கப்பட்டு இருட்டில் இருந்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தான் காரணம்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஓபிசி, பிற்படுத்தப்பட்டோர், குஜ்ஜார், பஹாரிஸ் உள்ளிட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. குஜ்ஜார் மக்களின் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை எதிர்த்து பாரூக் அப்துல்லாவின் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. இதனை குஜ்ஜார் மக்கள் மறந்துவிடக்கூடாது. நான் ராசூரிக்கு வந்தபோது குஜ்ஜார் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை குறைக்க மாட்டோம். பஹாரிஸ் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறியிருந்தேன். அதனை நிறைவேற்றியும் இருக்கிறேன்’’ என கூறினார்.












Click it and Unblock the Notifications