உதட்டுப்பிளவை சரி செய்ய ஆந்திர மருத்துவமனையில் இலவச அறுவைச் சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதட்டுப் பிளவை சரி செய்வதற்கான இலவச அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

குழந்தையின் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் உதடு மற்றும் மேல்வாயை உருவாக்கும் உறுப்புகள் இணையும். இந்தப் பகுதிகள் சரியான முறையில் இணையாவிட்டால், இந்தப் பகுதிகளுக்கிடையே பிளவு ஏற்படும். அதாவது இடைவெளி ஏற்படும். இது உதட்டுப் பிளவு, மேல் வாய்ப் பிளவு என வேறுபடும்.

ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு இதுபோல ஏற்படும். இதைத் தவிர அக்குழந்தைகளுக்கு உடலில் வேறு பிரச்சினை எதுவும் இருக்காது.

இப்படிப்பட்ட உதட்டுப் பிளவுகளை அறுவைச் சிகிச்சை மூலம் ஓரளவு சரி செய்ய முடியும். இதுபோன்றதொரு அறுவைச் சிகிச்சை கர்னூலில் உள்ள சாந்தி ராம் மருத்துவமனையில் செய்யவுள்ளனர். இதற்கான இலவச அறுவைச் சிகிச்சை முகாம் அங்கு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு 08514 - 222203, 09866308444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு அறியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+