'பாஜக பயங்கர சதி? 2024-ல் கர்நாடகா சட்டசபை தேர்தல்.. சத்தியம் செய்த குமாரசாமி- காங். பெரும் பீதி!
ராம்நகர்: கர்நாடகா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடந்தே தீரும்; இதை யாரும் மாற்றவே முடியாது என மதச்சார்பற்ற ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பேசியிருப்பது ஆளும் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பலத்துடன் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. இத்தேர்தலில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. பாஜகவின் வழக்கமான பார்முலா படி காங்கிரஸில் இருந்து 16 எம்.எல்.ஏக்களை இழுத்தால் கூட ஆட்சியை கவிழ்க்க முடியாது என்ற நிலைமையில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் பிரச்சனை: இருந்த போதும் லிங்காயத்து அதிகாரிகள் விவகாரம், துணை முதல்வர்கள் பதவி பிரச்சனை, புதிய மதுபானக் கடை திறப்பு, காவிரி நதிநீர் பிரச்சனை என திரும்பிய திசை எல்லாம் சித்தராமையா அரசு நாள்தோறும் அக்கப்போர்களை எதிர்கொண்டு வருகிறது. இது போதாது என பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன.
2024-ல் சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகுங்க: இதனிடையே ராம்நகரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரத்தான் போகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை ஒருவராலும் தடுக்க முடியாது. ஆகையால் கட்சியினர் அவரும் இப்போதே சட்டசபை தேர்தல் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என பேசியிருந்தார் குமாரசாமி.
6 மாதத்தில் ஆட்சி கவிழும்: கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான், சித்தராமையா அரசு 6 மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. என் தலைமையிலான கூட்டணி அரசை யார் கவிழ்த்தது என்பது எனக்கு தெரியும். ஆகையால் சித்தராமையா அரசு நிச்சயம் கவிழும் எனவும் குமாரசாமி கூறியிருந்தார்.
பழிவாங்கும் குமாரசாமி?: குமாரசாமியின் தொடர்ச்சியான இந்த பேச்சுகள் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே பெரும் பீதியை கிளப்பி உள்ளன. ஏற்கனவே குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பாதியிலேயே கவிழ்த்தது பாஜக. அதாவது தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவி குமாரசாமி ஆட்சி கவிழக் காரணமாக இருந்தனர்; அவர்களை அப்போது சித்தராமையா தடுக்கவில்லை என்ற கோபம் குமாரசாமிக்கு இன்னமும் இருக்கிறது; அதனால்தான் இப்போது சித்தராமையா அரசை பழிவாங்க துடிக்கிறார் குமாரசாமி என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அதனால்தான் தமது ஆட்சியை கவிழ்த்த அதே பாணியில் இப்போது சித்தராமையா அரசுக்கு எதிராக குமாரசாமி வரிந்து கட்ட தயாராகிவிட்டார் போல எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications