வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம்.. வன்முறையாக வெடித்தது! மேற்கு வங்கத்தில் மேலும் பதற்றம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் முர்ஷிதாபாத் நகரில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்திருந்தது. இந்நிலையில் தற்போது தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் புதியதாக வன்முறை வெடித்திருக்கிறது.
இங்கு நடந்த வன்முறையில் போலீசார் வாகனம் மீது கற்கள் எரிந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எனவே இப்பகுதி பதற்றம் மிகுந்ததாக மாறியிருக்கிறது.

கொல்கத்தா ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் வக்பு சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க இந்தியன் செக்யூலர் ஃப்ரன்ட்(ISF) அமைப்பை சேர்ந்தவர்கள் சென்றிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதியை மீறி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ISF கட்சியின் எம்எல்ஏ நௌஷாத் சித்திக்-கும் சென்றிருந்தார். போலீசார் அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து கட்சியினர் பேரணியை தொடங்கியுள்ளனர்.
பேரணி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாங்கர் பகுதியிலிருந்து தொடங்கியிருக்கிறது. அது கொல்கத்தா வரை சென்றிருக்கிறது. இந்த பேரணியில்தான் வன்முறை வெடித்திருக்கிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த மசோதா கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக அது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவின் பரிசீலனைக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா சட்டமானதால், அதை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
ஆனால் மேற்கு வங்கத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தப மாட்டோம் என்று அதன் முதல்வர் மமதா பானர்ஜி உறுதியாக தெரிவித்திருக்கிறார். அதேபோல அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்திருந்திருந்தது.
இந்த போராட்டம் குறித்து அதிருப்தியை தெரிவித்திருந்த முதல்வர் மமதா பானர்ஜி, "ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பள்ளது. அரசியலுக்காக போராட்டதை தூண்டிவிட்டு, உயிர்களை பலியாக்காதீர்கள். கலவரம் செய்பவர்கள் சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்துகின்றனர். தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நாங்கள் உருவாக்கவில்லை. அதை மத்திய அரசுதான் உருவாக்கியிருக்கிறது. நீங்கள் எதற்காக கலவரம் நடத்துகிறீர்களோ, அதற்கான பதிலை மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த சட்டம் பற்றி நாங்கள் ஏற்கெனவே தெளிவுப்படுத்தியுள்ளோம். இது இங்கு அமல்படுத்தப்படாது. அப்படி இருக்கையில் எதற்காக வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வன்முறையில் இதுவரை 3 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கு வங்க காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இன்று தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள ISF கட்சியினர், "மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் வக்பு சட்டம் அமல்படுத்தப்படாது என்று கூறயிிருந்தார். ஆனால், ஏன் எங்களுடைய போராட்டத்தை தடுக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இன்று நடந்த வன்முறையில் காவல்துறைக்கு சொந்தமான பைக் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பேருந்து கவிழ்க்கப்பட்டிருக்கிறது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications